கோலாலம்பூர், மார்ச் 4 – கிள்ளான் பள்ளத்தாக்கில் MRT 1, MRT 2 ரயில் பாதைகளை இணைக்கும் மூன்றாம் கட்ட MRT திட்டத்தின் நிர்மாணிப்பு பணிகளிக்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.
இதற்கு முன்பு அந்த திட்டத்தை பக்காத்தான் ஹரப்பான் அரசாங்கம் நிறுத்தி வைத்திருந்தது.
இதனிடையே, மூன்றாம் கட்ட MRT திட்டத்தை செயல்படுத்த உள்நாட்டு குத்தகையாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமென பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தார். தொடக்கத்தில் அந்த திட்டத்தை வரைந்தபோது, MRT 3, 30 நிலையங்களை உட்படுத்தியிருந்தது.