கோலாலம்பூர், பிப் 26 – ஜோகூர் மாநில சட்டமன்ற தேர்தலில் Muda கட்சியுடன் PKR மோதும் சூழ்நிலை ஏற்பட்டால் Pakatan Harapan கூட்டணி என்ற முறையில் PKR வேட்பாளர்களையே அமனா ஆதரிக்கும் என அக்கட்சியின் தொடர்பு இயக்குனர் Khalid Samad தெரிவித்தார்.
பக்காத்தான் ஹராப்பானின் உறுப்பு கட்சி என்ற முறையில் அமனா கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகளில் 4 இடங்களை Muda கட்சிக்கு அமானா விட்டுக்கொடுத்தது.
ஆனால் மூடா கட்சியும் பி.கே.ஆர் கட்சியும் ஒன்றுடன் ஒன்று மோதும் சூழ்நிலை உருவானால் கூட்டணியின் உறுப்புக் கட்சி என்ற முறையில் பி.கே. ஆர் வேட்பாளர்களையே அமனா ஆதரிக்கும் என காலிட் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.