ஜோகூர் பாரு, பிப் 5- ஜோகூர் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக Muda கட்சிக்கும் பக்காத்தான் ஹராப்பானுக்குமிடையே பேச்சுக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனினும் அந்த இரு கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு குறித்து இன்னும் எந்தவொரு உடன்பாடும் ஏற்படவில்லையென Muda கட்சியின் தலைவர் Syed Saddiq Syed Abdul Rahman தெரிவித்தார். இதனிடையே அஞ்சல் வாக்காளர்களுக்கான தகுதி தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என
Syed Saddiq கேட்டுக்கொண்டார். உயர்க்கல்வி மாணவர்கள் உட்பட சபா மற்றும் சரவாவிலுள்ள ஜோகூர் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வருவதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். எனவே தேர்தல் ஆணையம் அதனையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.