கோலாலம்பூர், அக்டோபர்-3, MyJPJ செயலியில் அக்டோபர் 10 தொடங்கி அமுலுக்கு வரவிருந்த MyDigital ID பயன்பாடு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சர்அந்தோனி லோக் அதனை அறிவித்துள்ளார்.
எனவே பொது மக்கள் இனி வழக்கம் போலவே அச்செயலியைப் பயன்படுத்தி வரலாமென்றார் அவர்.
முன்னதாக MyJPJ செயலியில் புதுப்பிக்கப்பட்ட தகவலின் படி, பயனர்கள் அனைவரும் அக்டோபர் 10-ஆம் தேதிக்குள் MyDigital ID கணக்குக்குப் பதிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அக்டோபர் 10-க்குப் பிறகு MyJPJ செயலியில் நுழைய இந்த MyDigital ID மட்டுமே பயன்படுத்தப்படும்.
எனவே பிரச்னைகளைத் தவிர்க்க, அத்தேதிக்குள் அதில் பதிந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையில், 10-ஆம் தேதி அது அமுலுக்கு வராது என அமைச்சு திடீரென அறிவித்துள்ளது.