Latestமலேசியா

Mysejahtera-வில் சுகாதார விபரங்களைப் புதுப்பிக்கத் தவறியதற்காக அபராதம்; போலீஸ் ரத்து செய்யும் 

கோலாலம்பூர்ஜூன் 7-  குறிப்பிட்ட காரணங்களைத் தவிரபொது மக்கள், MySejahtera செயலியில் தங்களின் சுகாதார நிலை குறித்த விபரங்களைப் புதுப்பிக்க வேண்டிய கட்டாயம் இல்லை.

அதையடுத்து,பேராக் சித்தியாவானில்  31 தொழிலாளர்களுக்கு விதிக்கப்பட்ட   அபராதத்தை   போலீஸ்  ரத்து  செய்யும்படி MKN  தேசிய பாதுகாப்பு மன்றம் கேட்டுக் கொண்டது.

வெளிநாட்டிற்கு  சென்று திரும்பியவர்கள், கோவிட் – 19 நோயாளிகளுடன்  நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் மட்டுமே மைசெஜாத்ராவில் தங்களின்  சுகாதார விபரங்களைப் புதுப்பிக்க வேண்டும்.

இவ்வேளையில் சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள்   மீது விதிக்கப்பட்ட அபராதம் ரத்து செய்யப்படுமென  பேராக் போலீஸ்  தலைவர்  Datuk Mior Faridalathrash Wahid  தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!