கோலாலம்பூர், நவ 4 – LHDN எனப்படும் வருமான வரி வாரியம் MyTax செயலி மூலம் வரி செலுத்துவோர் தங்களது பணத்தை திரும்பப்பெறும் நிலை குறித்த இணைப்பை எப்போதும் அனுப்பியதில்லை என இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அனுமதியின்றி அந்த செயலியில் எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படாது என்பதோடு இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடப்பு சட்டவிதிக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என வருமான வரி வாரியம் எச்சரித்துள்ளது.
மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் இது போன்ற செய்தி அல்லது பொய்யான தகவலை பரப்ப வேண்டாமென பொதுமக்களுக்கு உள்நாட்டு வரமான வரி வாரியம் ஆலோசனை தெரிவித்துள்ளது. தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் 233 ஆவது விதி மற்றும் தண்டனை சட்டத்தின் 505 ஆவது விதியின் கீழ் பொய்யான செய்திகளை பரப்புவோர் மீது குற்றஞ்சாட்டப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை தாங்கள் கடுமையாக கருதுவதாகவும் எங்களது சேவையில் வரி செலுத்துவோரின் நம்பிக்கையை மேம்படுத்துவற்கான முயற்சிகள் மேம்படுத்தப்படும் என வருமான வரி வாரியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.