
கோலாலம்பூர், நவ 8 – நாசி கண்டார் ‘Nasi Kandar’ உணவகத்தின் சமையல் அறையில் அதன் உணவகத்தின் ஊழியர் ஒருவர், உள்ளாடையை மட்டுமே அணிந்திருந்த நிலையில் வெளியான காணொளி வைரலானது வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி சமூக வலைத்தளவாசிகளும் முகம் சுளித்தனர்.
அந்த ஊழியரின் நிலைமையை தற்செயலாகப் பார்த்த வாடிக்கையாளரில் ஒருவர் அதனை பதிவு செய்துள்ளார். ஜோகூர் கடற்கரை, அலோஸ்டார் மற்றும் , கெடாவில் உள்ள பிரபலமான நாசி கண்டார் உணவகங்களில் இதுவும் ஒன்றாகும். நேற்று காலை முதல் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் காட்சியின்படி அந்த உணவக ஊழியர் மேற்சட்டை அணியாமல் வெறும் உள்ளாடையுடன் சில சமையல் உபகரணங்களை கையாள்கிறார். அந்த உணவகம் தூய்மையற்றதாக இருப்பதால் இச்சம்பவத்தை அதிகாரிகளுக்கு தெரிவிப்பதற்காக அதனை பதிவு செய்தவர் கூறியுள்ளார். இதுகுறித்து பல வலைத்தலைவாசிகள் தங்களது கருத்துக்களை வெளியிட்டனர்.
அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடை வளாகத்தை ஆய்வு செய்து கடையில் உள்ள தொழிலாளர்களின் நிலையைப் பற்றி கவலைப்படாத உணவக உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். ஊழியர்கள் சமையலறையில் உள்ளாடைகளை மட்டும் அணிந்தால், உணவின் தூய்மையும் சந்தேகத்திற்குரியது என்பது உறுதி. தொழிலாளர்கள் என்ன செய்கிறார்கள் மற்றும் அவர்கள் அணியும் உடைகளை கவனிப்பதும் உணவக உரிமையாளர்களின் பொறுப்பாக இருக்க வேண்டும் ஆபுடின் என்ற வலைத்தலவாசி பதிவிட்டுள்ளார்.