
மலேசியாவிலுள்ள, Netflix சந்தாதாரர்கள் இனி தங்கள் கடவுச்சொல்லை மற்றவர்களுடன் பகிர 13 ரிங்கிட்டை கட்டணமாக செலுத்த வேண்டும்.
குறிப்பாக, வெவ்வேறு வீடுகளில் வசிக்கும் பயனர்களுடன் கடவுச்சொல்லை பகிர்ந்து கொள்பவர்கள் அந்த கட்டணத்தை செலுத்த வேண்டும்.
எனினும், ஒரே வீட்டில் வசிப்பவர்கள் அந்த கட்டணத்தை செலுத்த தேவையில்லை.
இதற்கு முன், ஒரு சில லத்தின் அமெரிக்க நாடுகளில் மட்டுமே Netflix கடவுச்சொல் பகிர்வுக்கு கட்டணம் விதிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது மலேசியா உட்பட நூற்றுக்கும் அதிகமான நாடுகளுக்கு அது விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.