பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் -20, பெட்டாலிங் ஜெயா, NKVE நெடுஞ்சாலையில் பாராங் கத்தி மற்றும் கட்டைகளை ஏந்திய எழுவர் கொண்ட கும்பல் கொள்ளையிட்டதில், ஓர் ஆடவர் காயமடைந்தார்.
நேற்று அதிகாலை 4.30 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
பாதிக்கப்பட்ட நபரான 41 வயது ஆடவரை அடித்து, அவரிடமிருந்து ரொக்கம் மற்றும் சங்கிலியை அக்கும்பல் பறித்துச் சென்றது.
இதனால் தலையில் காயமேற்பட்டதோடு, 15,000 ரிங்கிட் நட்டத்தையும் அவர் சந்தித்துள்ளார்.
தப்பியோடிய கும்பலையும் அவர்கள் பயன்படுத்திய காரையும் பெட்டாலிங் ஜெயா போலீஸ் தீவிரமாகத் தேடி வருகிறது.