
தலைநகர், ஜன 26 –NKVE நெடுஞ்சாலையில், சாலையில், இரு வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்துக்கு, சாலையில் போடப்பட்டிருக்கும் வழிகாட்டி கோடுகளே காரணம் எனக் கூறப்படுவது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பொதுப் பணி அமைச்சு பணித்துள்ளது.
சம்பந்தப்பட்ட பகுதியில் சாலை வழிகாட்டி கோடுகள் முறையாக இல்லாதது, சீனப் பெருநாளுக்கு முன்னரே Dash நெடுஞ்சாலை நிறுவனம் கண்டறிந்தது தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக, பொதுப் பணி அமைச்சர் டத்தோ ஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
நேற்று தொடங்கி அந்த கோடுகளை மறுசீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ள வேளை ; இன்னும் மூன்று நாட்களில் அது நிறைவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
NKVE நெடுஞ்சாலையில் போடப்பட்டிருந்த வெள்ளை, மஞ்சள் கோடுகளால் எற்பட்ட குழப்பத்தால், இரு MPV வாகனங்கள் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் அமைச்சர் கருத்துரைத்தார்