
கோலாலம்பூர், ஜன 25 – நான்காவது குழந்தையை எதிர்ப்பார்த்துக் காத்திருந்த பெர்மத்தாங் பாவ் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரான Nurul Izzah Anwar கருச்சிதைவுக்கு உள்ளானார். தமது பரபரப்பான புதிய பணியின் காரணமாக அடிக்கடி பினாங்கு மற்றும் புத்ரா ஜெயாவுக்கு பயணம் மேற்கொண்டதால் இந்த துரதிஷ்டமான நிலைமைக்கு உள்ளானதாக அவர் தெரிவித்துள்ளார். தமது மூன்று குழந்தைகளுக்கு மட்டுமின்றி தமது பெற்றோருக்கும் இந்த சம்பவம் பெரும் கவலையையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்திவிட்டதாக Nurul Izah தமது முகநூலில் பதிவிட்டுள்ளார். இதனிடையே அமைச்சர்களான Steven Sim, Hannah Yeoh மற்றும் Sim Tze Tzin ஆகியோர் Nurul Izah வுக்கு தங்களது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொண்டனர். Khazanah ஆய்வு கழகத்தின் மூத்த ஆய்வாளர் Yin Shao Loong, என்பவரை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் Nurul Izah திருமணம் செய்துகொண்டார்.