Latestமலேசியா

On-call பணிக்கான அலவன்ஸ் தொகை உயருமா? விரைவிலேயே நல்ல செய்தி என்கிறார் சுகாதார அமைச்சர்

ஷா ஆலாம், ஆகஸ்ட் -30 – On-call எனப்படும் வேலை நேரத்திற்கு வெளியே அவசர அழைப்பின் போது கடைமையாற்றுவதற்கான அலவன்ஸ் தொகை தொடர்பில், பொதுச் சேவை சுகாதாரப் பணியாளர்களுக்கு விரைவிலேயே நல்ல செய்தி கிடைக்கலாம்.

நடப்பு அலவன்ஸ் தொகையை உயர்த்தும் பரிந்துரை அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு, அதற்கு பிரதமரிடமிருந்து நேர்மறையான பதிலும் கிடைத்துள்ளது.

எனவே, 2025 வரவு செலவு அறிக்கையில் அந்த நல்ல செய்தி இடம் பெறலாமென, சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சுல்கிப்ளி அஹ்மாட் (Datuk Seri Dr Dzulkifli Ahmad) கோடி காட்டினார்.

2025 பட்ஜெட் அக்டோபர் 18-ல் நாடாளுமன்றத்தில் தாக்கலாகிறது.

On-call பணிக்கான அலவன்ஸ் தொகை மறு ஆய்வுச் செய்யப்பட வேண்டுமென்ற, ஒப்பந்த மருத்துவர்கள் குழுவின் கோரிக்கை அமைச்சரவையின் பார்வைக்குக் கொண்டுச் செல்லப்படும் என, கடந்த வாரம் தான் அமைச்சர் கூறியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!