
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 137 OP LIMAU சோதனை நடவடிக்கைகள் மூலம், சூதாட்டத்தில் ஈடுபட்ட 904 பேர் கைது செய்யப்பட்டனர்.
இம்மாதம் 15-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரையில், 15 நாட்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அந்த சோதனை நடவடிக்கைகள் வாயிலாக, ஐந்து லட்சத்து 13 ஆயிரத்து 793 ரிங்கிட் பொருட்களும், ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக, அரச மலேசிய போலீஸ் படையின் செயலாளர் டத்தோ நோர்சியா முஹமட் சாடுடின் தெரிவித்தார்.
கட்டத்திற்குள் சூதாட்டம், கட்டத்திற்கு வெளியில் சூதாட்டம் என இரு வேறு பிரிவுகளை அந்த சோதனை உட்படுத்தியிருந்தது.
சிலாங்கூரில், கட்டத்திற்குள் சூதாட்டம் தொடர்பில் மிக அதிகமாக 17 சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வேளை ; 134 பேர் கைதாகினர்.
கட்டத்திற்கு வெளியே சூதாட்டம் தொடர்பில், மிக அதிகமாக 59 பேர் சரவாக்கில் கைது செய்யப்பட்ட வேளை ; பினாங்கில் மிக அதிகமாக 29 ஆயிரத்து 159 ரிங்கிட் பெருமானமுள்ள பறிமுதல் மேற்கொள்ளப்பட்டது.