
கோலாலம்பூர், ஜன 19 – எதிர்பாராத விதமாக, Bank Negara Malaysia -மத்திய வங்கி , OPR வட்டி விகிதத்தை 2. 75 விழுக்காடாக நிலைநிறுத்த முடிவு செய்திருக்கிறது.
கடந்தாண்டு மத்திய வங்கி, மே, ஜூலை, செப்டம்பர், நவம்பர் ஆகிய மாதங்களில் OPR வட்டி விகிதத்தை நான்கு முறை அதிகரித்தது.
ஆகக் கடைசியாக நவம்பரில் OPR வட்டி விகிதம், 25 புள்ளிகள் அதிகரித்து 2. 75 விழுக்காடு உயர்ந்தது.
அந்த வட்டி விகிதம், தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக அதிகரிக்குமென பொருளாதார நிபுணர்கள் கணித்திருந்த நிலையில், எதிர்பார்க்காத வகையில் மத்திய வங்கி அந்த வட்டி விகிதத்தை நிலை நிறுத்தும் முடிவை எடுத்தது.