
OPR வங்கிகளுக்கு இடையிலான வட்டி விகிதம், அடுத்தாண்டு மேலும் இருமுறை அதிகரிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அடுத்தாண்டு நாட்டில் பணவீக்கம் தொடரும் என்பதால், அதனை எதிர்கொள்ள ஏதுவாக, OPR வட்டி விகிதம் முறையே 25 புள்ளிகள் அதிகரிக்கப்படும்.
அதன் வாயிலாக தற்போது 2.75-ஆக இருக்கும் வங்கிகளுக்கு இடையிலான அந்த வட்டி விகிதம், அடுத்தாண்டு 3.25 விழுக்காடு வரையில் பதிவாகலாம் என CGS – CIMB அமைப்பு கூறியுள்ளது.
அடுத்தாண்டு நாட்டில் பணவீக்கம் தொடருமென, கடந்த மாதம் பேங் நெகாரா கூறியிருந்தது. அரசாங்கத்தின் தலையீட்டால், கோழி போன்ற உணவு பொருள் உட்பட, டோல் கட்டணம், எரிபொருள் விலை ஆகியவற்றை கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுவதால், குறுகிய காலத்தில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், அடுத்த மாதம் 23-ஆம் தேதி தொடங்கி உயர்வு காணவுள்ள, தொழில்துறையினருக்கான மின்சாரக் கட்டணத்தால் பணவீக்கம் சற்று உயர்வுக் காணலாம் என கூறப்படுகிறது.