
OPR வட்டி விகித உயர்வை பேங்க் நெகாரா ஒத்தி வைக்கலாம் அல்லது எதிர்ப்பார்க்கப்பட்டதை காட்டிலும் சிறிய அளவில் அதிகரிக்கலாம் என Maybank IB வங்கி கூறியுள்ளது.
எதிர்மறையான கண்ணோட்டத்தை தவிர்க்க அந்நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என அந்த முதலீட்டு வங்கி தெரிவித்தது.
தற்சமயம், OPR வங்கிகளுக்கு இடையிலான வட்டி விகிதம் 2.75 விழுக்காடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாளை நடைபெறவுள்ள பணவியல் கொள்கை செயற்குழு கூட்டத்தின் வாயிலாக, அது 3.25 விழுக்காடு வரையில் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது