
OPR – வங்கிகளுக்கு இடையிலான வட்டி விகிதத்தை மூன்று விழுக்காடாக உயர்த்தியதன் வாயிலாக, பேங் நெகாரா ‘கொடூரமாக’ நடந்து கொள்ளவில்லை.
மாறாக, பணவீக்கம் தொடர்ந்து உயராமல் கட்டுப்படுத்தவே அம்முடிவு எடுக்கப்பட்டதாக, பேங்க் நெகாரா ஆளுனர் டான் ஸ்ரீ நோர் சம்சியா முஹமட் யூனோஸ் தெரிவித்தார்.
பணவீக்கம் கட்டுக்குள் இல்லாமல் போகும் சூழல் தான் மிகவும் கொடுமையானது. பணவீக்கம் உயர்ந்தால், கடனுதவியை பெற்றவர்களோ? பெறாதவர்களோ? வித்தியாசம் இன்றி அனைவரின் வாங்கும் சக்தியும் பாதிக்கப்படும்.
அதனால் தான், நிலையான பொருளாதார வளர்ச்சியை உந்தச் செய்யவே OPR வட்டி விகிதம் உயர்தப்பட்டதாக, டான் ஸ்ரீ நோர் சம்சியா தெளிவுப்படுத்தினார்.
அண்மையில், OPR வட்டி விகிதத்தை மூன்று விழுக்காடாக உயர்த்தியதால், பேங்க் நெகாரா ‘கொடூரமாக’ நடந்து கொண்டதாக கூறப்படுவது தொடர்பில், அவர் அவ்வாறு கருத்துரைத்தார்.