கோலாலம்பூர், நவம்பர்-18, கோலாலம்பூர், பழைய கிள்ளான் சாலை, Taman OUG-யில் உள்ள ஒரு வீட்டில், குளிர்பதனப் பெட்டியிலிருந்து மீட்கப்பட்ட மூதாட்டியின் சடலம் மீதான சவப்பரிசோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மூன்றாண்டுகளாக குளிர்பதனப் பெட்டியில் இருந்ததால் சடலம் இறுகிப் போயுள்ளது.
எனவே சவப்பரிசோதனையை முடிக்க தடயவியல் துறைக்கு சற்று கால அவகாசம் தேவைப்படுவதாக, பிரிக்ஃபீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் Ku Mashariman Ku Mahmood தெரிவித்தார்.
இவ்வேளையில் சந்தேக நபரும் அம்மூதாட்டியின் மகனுமான ஆடவரின் தடுப்புக் காவல் நீட்டிக்கப்படலாம்.
மனதளவிலும் உடலளவிலும் அவ்வாடவர் இன்னும் முழுமையாக மீளாமலிருப்பதே அதற்குக் காரணமாகுமென Ku Mashariman சொன்னார்.
அதோடு, அண்டை வீட்டுக்காரர் உட்பட இதுவரை 5 பேரது வாக்குமூலங்களைப் போலீஸ் பதிவுச் செய்துள்ளது.
2021-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தனது தாயைக் கொன்று, அவரின் சடலத்தை வீட்டில் குளிர்பதனப் பெட்டியில் மறைத்து வைத்ததாக 50 வயது அந்நபர் விசாரணையை எதிர்நோக்கியுள்ளார்.