ஷா அலாம், பிப் 4 – PBM எனப்படும் Parti Bangsa Malaysia கட்சியில் இணையப் போவதாக வெளியான தகவலை பெர்சேவின் முன்னாள் தலைவர் டத்தோ அம்பிகா , பி.கே.ஆர் கட்சியின் உதவித் தலைவர் தியான் சுவா, பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் மரியா சின் ஆகியோர் இன்று மறுத்தனர். விரைவில் அந்த கட்சியில் இணையப் போவதாக வெளியான தகவல் குறித்து வினவப்பட்டபோது அது முழுக்க முழுக்க கட்டுக் கதை என அவர்கள் தெரிவித்தனர். வேண்டுமென்றே திட்டமிட்டு இந்த பொய்யான தகவல் பரப்பப்படுவதாக தியான் சுவா கூறினார். இது அடிப்படையற்ற செய்தி என்றும் அவர் தெரிவித்தார்.
Related Articles
Check Also
Close
-
சுங்கை பூலோ சிறையில் கைதிகள் நெரிசல்6 hours ago