
கோலாலம்பூர், மே 19 – Penjana Kerjaya முதலீட்டுத் திட்டத்தின் கீழ் 1.3 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய போலி பண கோரிக்கை அங்கீகரிப்பதற்காக ஒரு நிறுவனத்தின் உரிமையாளரிடமிருந்து பெரும் அளவில் லஞ்சம் பெற்ற சந்தேகத்தின் பேரில் அரசு ஊழியர் ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC கைது செய்துள்ளது. 2021 மற்றும் 2022 ஆண்டுகளுக்கிடையே போலி பண கோரிக்கைகளை அங்கீகரிப்பதற்காக நிறுவனத்தின் உரிமையாளரிடமிருந்து ஆயரக்கணக்கான ரிங்கிட்டை அந்த சந்தேக நபர் பெற்றுள்ளதாக MACC தகவல்கள் தெரிவித்தன.
இடைத்தரகர் ஒருவர் மூலம் அந்த சந்தேகப் பேர்வழி இக்குற்றத்தை புரிந்துள்ளதாக கூறப்படுகிறது. வாக்குமூலம் அளிப்பதற்காக புத்ரா ஜெயாவிலுள்ள MACC தலைமையகத்திற்கு அழைப்பக்கபட்ட பின் 20 வயதுக்கு மேற்பட்ட அந்த நபர் கைது செய்யப்பட்டார். அந்த அரசு ஊழியர் கைது செய்யப்பட்டதை MACC யின் மூத்த விசாரணை இயக்குனர் Hishamuddin Hashim உறுதிப்படுத்தினார். MACC சட்டத்தின் 17 A விதியின் கீழ் அந்த நபரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.