கோலாலம்பூர், ஆகஸ்ட் -27 – புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கின் திடலின் தரம் குறித்து, மலேசியக் கால்பந்து சங்கமான FAM மீண்டும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
அங்கு, செப்டம்பர் 4-ம் தேதி Pestabola Merdeka கால்பந்து போட்டி தொடங்கவுள்ள நிலையில், FAM தனது கவலையை வெளிப்படுத்தியது.
திடலின் பல பகுதிகள் நல்ல நிலையில் இல்லை; அதோடு, கடந்த வாரம் சனிக்கிழமை நடைபெற்ற FA கிண்ண இறுதியாட்டத்தின் போதும், புல்தரை பிய்த்துக் கொண்டது.
திடலை இன்னமும் பயன்படுத்த முடியுமென்றாலும் 100 விழுக்காடு தயார் நிலையில் அது இல்லை.
திடல் இப்படி மோசமான நிலையிலிருந்தால் ஆட்டக்காரர்களுக்கு காயம் ஏற்பட வாய்ப்புண்டு.
கடைசி நேரம் என்பதால் அரங்கை மாற்றவும் முடியாது.
எனவே போட்டி தொடங்குவதற்குள் அரங்கத் திடல் அதற்கு முழுமையாகத் தயாராகியிருப்பதை, அதனை நிர்வகிக்கும் Perbadanan Stadium Malaysia (PSM) உறுதிச் செய்ய வேண்டுமென, FAM கேட்டுக் கொண்டது.
நாளை நடைபெறவுள்ள சந்திப்புக் கூட்டமொன்றில் PSM-மிடம் அது குறித்து விளக்கம் கோரப்படும் என FAM கூறியது.