
கோலாலம்பூர், ஜன 28 – அம்னோவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சரான கைரி ஜமாலுடினுக்கு, PKR கட்சியில் இணைய அழைப்பு விடுப்பதா இல்லையா என்பது தொடர்பில் , கட்சியின் தலைமைத்துவம் தான் முடிவு செய்யுமென , அக்கட்சியின் துணைத் தலைவர் Rafizi Ramli கூறியிருக்கிறார்.
அந்த விவகாரம் குறித்து இன்னும் எழுப்பப்படவில்லை. ஆனால் அது குறித்து முடிவு செய்வது தனது ஒருவரின் முடிவல்ல என அவர் குறிப்பிட்டார்.
இவ்வேளையில், அந்த முன்னாள் ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினரின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை PKR கட்சி தொடர்ந்து கண்காணித்து வருமென ரபிசி கூறினார்.