Latestமலேசியா

PLKN பயிற்சியைத் தொடரும் முடிவுக்கு பெற்றோர்கள் உட்பட 87% ஆதரவு

கூலாய், ஜனவரி-10, PLKN எனப்படும் தேசிய சேவைப் பயிற்சியைத் தொடரும் அரசாங்கத்தின் முடிவை, பெற்றோர்கள் உட்பட 16 வயது முதல் 60 வயது வரையிலான 87 விழுக்காட்டினர் ஆதரித்துள்ளனர்.

தற்காப்பு மற்றும் பாதுகாப்புக்கான மலேசியக் கழகம் MIDAS நடத்திய ஆய்வு முடிவுகளை மேற்கோள் காட்டி, மக்களவை சபாநாயகர் தான் ஸ்ரீ ஜொஹாரி அப்துல் (Tan Sri Dr Johari Abdul) அவ்வாறு கூறினார்.

3,092 பேர் பங்கேற்ற அந்த ஆய்வில், தங்களது பிள்ளைகள் வாழ்க்கையில் தெளிவான குறிக்கோளைக் கொண்டிருக்க வேண்டுமென பெற்றோர்கள் பரவலாகக் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.

எனவே, இவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்படும் PLKN 3.0 பயிற்சி, மலேசிய இளைஞர்களிடையே தலைமைப் பண்புகளை ஊட்டி தனி அடையாளத்தை உருவாக்க முடியும் என்று அரசாங்கம் நம்புவதாக அவர் சொன்னார்.

இதன் மூலம் நாளையத் தலைவர்களாகும் வாய்ப்பையும் அதற்குண்டான ஆற்றலையும் இளையோர் மேம்படுத்திக் கொள்ள முடியுமென்றார் அவர்.

70 விழுக்காடு இராணுவப் பயிற்சியையும் 30 விழுக்காடு தேசியத்தையும் சொல்லிக் கொடுக்கும் இந்த PLKN பயிற்சி, ஜனவரி 12 முதல் பிப்ரவரி 25 வரை சோதனை முறையில் நடத்தப்படவுள்ளது.

அதில் 52 பெண்கள் உட்பட 200 பேர் தன்னார்வ முறையில் பயிற்சியில் ஈடுபடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!