பெர்லின். பிப் 19 – ஜெர்மனியிலிருந்து அமெரிக்காவுக்கு Porsche, Audi, Bantley போன்ற கார்களை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று அட்லான்டிக் கடலில் போர்த்துகலின் Azores தீவுக்கு அருகே தீப்பிடித்தது என Volkswagen நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
Panama வைச் சேர்ந்த அந்த கப்பல் ஜெர்மனியில் Volkswagen தொழிற்சாலையைக் கொண்டுள்ள Emden னிலிருந்து அமெரிக்காவின் Davisville சென்று கொண்டிருந்தது. அந்த கப்பலில் 1,100 Porsche மற்றும் 189 Bentley கார்கள் இருந்ததாகவும் அவர் கூறினார்.
Audi கார்களும் அக்கப்பலில் இருந்தன. எனினும் எத்தனை Audi கார்கள் அக்கப்பலில் இருந்தன என அறிவிக்கப்படவில்லை. Volkswagen, Porsche , Audi, Lamborghini என 3,965 கார்கள் அக்கப்பலில் இருந்ததாக Volkswagen நிறுவனத்தின் மின்னஞ்சல் தகவல்கள் கூறின.