
மார்ச் முதலாம் தேதி தொடங்கிய PTPTN உயர்கல்வி கடனுதவிக்கான கழிவு சலுகை இன்றோடு நிறைவுக்கு வருவதாக, PTPTN உயர்கல்விக் கடனுதவி வாரியம் தெரிவித்தது.
கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இவ்வாண்டுக்கான வரவுச் செலவுத் திட்டத்தில் அந்த சலுகை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அந்த சலுகையின் கீழ், PTPTN கல்விக் கடனுதவியை முழுமையாக திரும்ப செலுத்துபவர்களுக்கு 20 விழுக்காடு கழிவு வழங்கப்பட்ட வேளை ; குறைந்தது பாதிக் கடனுதவியை திரும்ப செலுத்துபவர்கள் 15 விழுக்காட்டு கழிவை பெற்றனர்.
அதே சமயம், சம்பளம் பிடித்தம் வாயிலாக கடனுதவியை செலுத்துபவர்களுக்கு 15 விழுக்காடு கழிவும், myPTPTN செயலி வாயிலாக கடனை திரும்ப செலுத்துபவர்களுக்கு ஐந்து விழுக்காடு கழிவும் வழங்கப்பட்டது.
எதிர்கால தலைமுறைக்கான கல்வில் கடன் நிதியின் நிலைத்தன்மையை உறுதிச் செய்ய அரசாங்கம் அந்த சலுகையை வழங்கியது.