
கோலாலம்பூர், ஜன 19 – திகில் காட்சிகளைக் கொண்ட Pulau உள்ளூர் திரைப்படத்தின் Trailer எனப்படும் முன் விளம்பர காட்சி பார்ப்பதற்குப் பொருத்தமற்றதாக இருப்பதாக தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர் Fahmi Fadzil தெரிவித்திருக்கிறார். எனினும் இது உள்துறை அமைச்சின் திரைப்பட தணிக்கை வாரியத்தின் வரம்பிற்குட்பட்டதாக இருப்பதால் இது குறித்து தாம் பேசமுடியாது என அவர் கூறினார். தேசிய தணிக்கை வாரியத்தின் சார்பில் தாம் கருத்துரைக் முடியாது. ஆனால் மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகமான Finas இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது. தணிக்கை அம்சத்தை இது கொண்டிருக்கவில்லை. Finas கண்காணிப்பு விதிகள் எப்படியிருந்தபோதிலும் SOP எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நடவடிக்கை விதிமுறைகள் தேசிய திரைப்பட தணிக்கை வாரியம் மற்றும் Finas சிற்கு உட்பட்டதாகவே இருக்கும் என Fahmi தெரிவித்தார்.