குவாலா சிலாங்கூர், ஆகஸ்ட் -30 – சிலாங்கூர், பண்டார் புன்ச்சாக் ஆலாமில் (Puncak Alam) புலி நடமாட்டம் இருப்பதாகக் கூறப்படுவதை, PERHILITAN எனப்படும் வன விலங்கு மற்றும் தேசியப் பூங்கா துறை மறுத்துள்ளது.
புலி நடமாடியதாகக் கூறி வைரலான வீடியோ உண்மையில் கிளந்தான், குவாலா பெத்திஸ்( Kuala Betis) எனுமிடத்தில் பதிவுச் செய்யப்பட்டதாகும்.
21-ஆம் நிகழ்ந்த அச்சம்பவம் தொடர்பில் கிளந்தான் PERHILITAN உரிய நடவடிக்கைகளை எடுத்து விட்டது.
எனவே, புலி நடமாட்டம் குறித்து உண்மை நிலவரம் தெரியாமல் தகவல்களைப் பரப்பவோ பகிரவோ வேண்டாமென பொதுமக்களை அது கேட்டுக் கொண்டது.
அத்தகையச் செயல், பகுதி வாழ் மக்களிடையே வீண் அச்சத்தை ஏற்படுத்தி விடுமென PERHILITAN நினைவுறுத்தியது.
சாலையோரமாக வரிப் புலி நடமாடுவதை காரோட்டி ஒருவர் கைப்பேசியில் பதிவுச் செய்யும் வீடியோ முன்னதாக முகநூலில் வைரலானது.
கிட்டத்தட்ட 500 பேர் அதனை பகிர்ந்து அவ்விஷயம் பரபரப்பானது குறிப்பிடத்தக்கது.