பிஹார், பிப் 9 – உலக வளர்ச்சிக்கு ஏற்ப தொழிற்துறைகள் பல மாற்றத்தை தழுவிக் கொள்வது காலத்தின் கட்டாயமாக உள்ளது. மக்களின் வாழ்க்கை முறையையும் அது மாற்றியிருக்கின்றது. ஆனால் அந்த மாற்றத்திற்கு ஏற்ப பிச்சைக்காரர்களும் மாறியிருக்கின்றனர் என்பதே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் தற்போது,பொருட்களையோ சேவையையோ பெறுவதில் ரொக்கமல்லா முறையை அதிகம் பயன்படுத்தும் வேளை, அவர்களுக்கு எளிதாக இருக்குமென்பதற்காக, QR குறியீட்டைக் கொண்டு பிச்சை எடுத்து வருகிறார் ஆடவர் ஒருவர்.
இந்தியா, பீஹார், பெட்டியா (Bettiah )பகுதியில், QR குறியீட்டைக் கொண்டு , இலக்கவியல் முறையில் பணத்தை ஏற்றுக் கொள்ளும் பிச்சைக்காரர் ஒருவரின் காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது. அந்நபர் தனது கழுத்தில் QR குறியீட்டைக் கொண்ட அட்டையை மாட்டிக்கொண்டு, பொது மக்களை அணுகி வருவதைக் காண முடிகிறது.