
கோலாலம்பூர் , மார்ச் 14 – பொருளாதார அமைச்சர் Rafizi Ramli, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஆகியோரின் முகவரிக்கு பட்டுவாடா செய்யப்பட்ட கஞ்சா போதைப் பொருள் சாறு கலவையைக் கொண்ட பற்பசை பொட்டலத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பொருளாதார அமைச்சின் அதிகாரி இது தொடர்பாக புகார் செய்துள்ளதாக Sepang மாவட்ட போலீஸ் தலைவர் துணைக் கமிஷனர் Wan Kamarul Azran வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். அந்த பார்சல் தொடர்பாக Pulau Meranti J&T பட்டுவாடா மையத்திடமிருந்து தொலைபேசி அழைப்பையும் அந்த அதிகாரி பெற்றுள்ளார். தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் கலவையைக் கொண்ட அந்த பொருளுக்கும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்த முகவரிக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லையென போலீஸ் விசாரணயில் தெரியவந்துள்ளதாக Wan Kamarul தெரிவித்தார்.