
ரோம், செப்டம்பர் 20 – இத்தாலியில், தனது கணவருடன் இரவு உணவு உட்கொள்ள, உணவகத்திற்கு சென்ற பெண் ஒருவர், அங்கு சமைப்பதற்காக உயிருடன் வைக்கப்பட்டிருந்த இராலை, பணம் கொடுத்து வாங்கி கடலில் விட்ட சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
அந்த ஆடம்பர Lobster இராலின் விலை 175 பவுண்டுகள் அல்லது ஆயிரத்து 20 ரிங்கிட் ஆகும்.
எனினும், அவ்வளவு பணம் கொடுத்து உண்பதற்காக வாங்கிய அந்த இராலை, கடலில் விட்ட அப்பெண்ணின் செயல் அங்கிருந்தவர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது.
உணவக உரிமையாளர், அந்த இராலின் எடையை நிறுத்து அதன் விலையை அந்த தம்பதியிடம் கூறியதோடு, அதனை வாளி ஒன்றில் போட்டு அப்பெண்ணிடம் கொடுத்தார்.
அப்பெண் சற்றும் எதிர்பாரா வகையில், அதனை அருகில் இருந்த கடலில் கொண்டு விட்டது அங்கிருந்தவர்களை வாய் பிளக்கச் செய்ததாக கூறப்படுகிறது.
எனினும், அதன் வாயிலாக அந்த பெண் அளவு கடந்த மகிழ்ச்சியடைந்ததாக, உணவக உரிமையாளர் தெரிவித்தார்.
இரலை கடலில் விடும் காட்சியை, அப்பெண்ணின் கணவர் காணொளியாக பதிவுச் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.