Latestமலேசியா

RM33,870 லஞ்சம் பெற்ற, 4 குற்றச்சாட்டுகளை பத்து பஹாட் ஆசிரியர் மறுத்தார்

ஜோகூர் பாரு, ஆகஸ்ட் 13 – கடந்த நவம்பர் 2022 மற்றும் ஜனவரி 2023ஆம் ஆண்டில் 33,870 ரிங்கிட் 10 சென் லஞ்சம் பெற்றதாக நான்கு குற்றச்சாட்டுகள், இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆசிரியர் ஒருவர் மீது கொண்டு வரப்பட்டது.

குற்றப்பத்திரிகையின் படி, அப்துல் அஜிஸ் ஹூசின் (Abdul Aziz Hussin) எனும் அந்த 54 வயது ஆசிரியர், பத்து பஹாட்டில் உள்ள ஒரு பள்ளியில் பணிபுரிபவர்.

இந்நிலையில் ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் உட்பட இரண்டு வெவ்வேறு நபர்களிடமிருந்து 33,870 ரிங்கிட் 10 சென் லஞ்சத் தொகையைப் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையச் சட்டத்தின் கீழ், அந்த ஆசிரியருக்கு 100,000 ரிங்கிட் அபராதம் அல்லது பத்து வருடங்களுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்பட வேண்டும்.

எனினும், குற்றம் சாட்டப்பட்ட அந்த ஆசிரியர், தன் மீதான குற்றச்சாட்டுகளை நீதிபதி டத்தோ அகமட் கமால் அரிபின் இஸ்மாயில் (Datuk Ahmad Kamal Arifin Ismail) முன்னிலையில் மறுத்தார்.

இதனிடைய, குற்றம் சாட்டப்பட்டவர் தனது எட்டு குழந்தைகளையும், பெற்றோர்களையும் ஆதரிக்க வேண்டும் என்பதால், 20,000 ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு செப்டம்பர் 8-ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!