Latestமலேசியா

RM40,000க்கு மேல் பணமும் ஆபரணங்களும் திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட ரோகிங்கிய ஆடவன் அடித்துக் கொலை செய்து புதைக்கப்பட்டான்

கோலாலம்பூர், பிப் 4 – நகைகள் மற்றும் 40,000 ரிங்கிட்டிற்கும் மேலான ரொக்கத்தை திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஆடவர் ஒருவர் இறக்கும்வரை தாக்கப்பட்டபின் புதைக்கப்பட்டதை போலீசார் கண்டுப்பிடித்தனர். 20 வயதுடைய அந்த ரோஹிங்ய நபர் கடந்த நான்கு மாத காலமாக கோலா மூடா பகுதியில் தனது முதலாளி வீட்டில் இருந்து வந்ததோடு அங்கு வீட்டு வேலை செய்து வந்ததாக நம்பப்படுகிறது. ஜாலான் கம்போங் சுங்கை பாருவிலுள்ள வீடமைப்பு பகுதியிலுள்ள வீடு ஒன்றில் தனது கணவர் இறந்து கிடந்ததாக ஜனவரி 28ஆம் தேதியன்று ஒரு பெண்ணிடமிருந்து போலீஸ் புகாரைப் பெற்றதாக கோலா மூடா போலீஸ் தலைவர் வான் அசாருடின் வான் இஸ்மாயில் ( Wan Azharuddin Wan Ismail ) தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக 35 வயது முக்கிய சந்தேகப் பேர்வழி உட்பட எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

40,150 ரிங்கிட் ரொக்கம், தங்கச் சங்கலி, மூக்குத்தி ஆகியவற்றை கடந்த ஜனவரி 4ஆம்தேதி அந்த நபர் திருடிவிட்டதாக அவரது முதலாளி குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த திருட்டு விவகாரம் குறித்து தனது வீட்டில் வேலை செய்த நபருக்க எதிராக முதலாளி போலீசில் புகார் செய்ததைத் தெடர்ந்து தண்டனைச் சட்டத்தின் 380 ஆவது விதியின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. கைது செய்யப்பட்ட சந்தேகப் பேர்வழி தனது வீட்டின் வேலைக்காரர், அவரது மனைவி மற்றும் ஐ.நா அகதிகள் ஆணைக்குழுவின் கார்டை கொண்டிருந்த அவரது தந்தையையும் கடந்த ஒரு மாத காலமாக பிடித்து வைத்திருந்ததோடு காணாமல்போன ரொக்கத்தை மீண்டும் பெறுவதற்கு தனது வேலைக்காரரை தாக்கி வந்ததாக கூறப்படுகிறது. மூன்று பிள்ளைகளை கொண்ட அந்த ரோஹிங்ய ஆடவரின் சடலம் கண்டுப்பிடிக்கப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன் அவர் இறந்திருக்கலாம் என நம்பப்படுவதாக வான் அசாருடின் தெரிவித்தார். உயிரிழந்தவரின் சடலம் துணியால் மூடப்பட்டு, குளியலறை தொட்டியில் வைக்கப்பட்டு, பிறகு அருகிலுள்ள வீட்டில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!