Latestமலேசியா

Rohana Rozan னிடமிருந்து 10 மில்லியன் டாலரை MACC திரும்ப கோரும்

கோலாலம்பூர், மார்ச் 1 – ASTRO வின் முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரி Rohana Rozan னிடமிருந்து 1 MDB தொடர்புடைய ரொக்கம் மற்றும் 10 million அமெரிக்க டாலர் மதிப்புடைய சொத்துக்களை திரும்பப் பெறுவதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

மேலும் Rohana Rozan தற்போது MACC யின் விசாரணையை எதிர்நோக்கியிருப்பதால் அது தொடர்பாக அமெரிக்காவிலுள்ள தரப்பிடமிருந்து வாக்குமூலத்தை பெறுவதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்படும்.

MACC யின் தலைமை ஆணையர் Azam Baki இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இதனை தெரிவித்தார். லண்டனில் 10 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய வீடு ஒன்றை வாங்கித் தராவிட்டால் 1 MDB ஊழலில் தமக்கு உள்ள தொடர்பு குறித்து அம்பலப்படுத்தப்போவதாக Rohana மிரட்டியதாக Goldman Sachs வங்கியாளர் Tim Leissner அமெரிக்க நீதிமன்றத்தில் அளித்த சாட்சியத்தில் கூறியிருந்தார். மேலும் Rohana வுடன் தமக்கு 10 ஆண்டு கால தொடர்பு இருந்த தகவலையும் அவர் நீதிமன்றத்தில் வெளியிட்டிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!