Latestமலேசியா

RT-Eco தொழில்நுட்பப் பயன்பாட்டை விரிவுபடுத்த அரசாங்கம் ஆய்வு செய்து வருகிறது – ஜொஹாரி அப்துல் கானி

குவாலா லங்காட், செப்டம்பர் 4 – செம்பனை எண்ணெய் நிறுவனத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு செயல்முறையில் RT-Eco தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை விரிவுபடுத்தும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

சுற்றுச்சுழல் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலும், செம்பனை எண்ணெய் பொருட்களின் உற்பத்தியின் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கிலும், இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பம் காணப்படுவதாக தோட்ட மற்றும் மூலப்பொருள் துறையின் அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஜொஹாரி அப்துல் கானி தெரிவித்தார்.

இன்று ஸ்ரீ மோரிப் செம்பனை நிறுவனத்தில் (Seri Morib Palm Oil Mil) அதிகாரப்பூர்வமாக அறிமுகம் கண்ட RT-Eco தொழில்நுட்ப விழாவில், மலேசிய செம்பனை வாரியத்தின் தலைவர் டத்தோ டாக்டர் அஹ்மட் பர்வீஸ் குலாம் காதிர் (Datuk Dr Ahmad Parveez Ghulam Kadir) மற்றும் மேரு ஜெயா Pome Solutions நிறுவனத்தின் தலைவரும் ம.இ.காவின் தேசிய தலைவருமான தான் ஸ்ரீ விக்னேஸ்வரனும் கலந்து கொண்டனர்.

இந்த RT-Eco தொழில்நுட்பமானது மேரு ஜெயா (Meru Jaya) Pome Solutions வழி இயக்கப்படுகிறது.

Pome-யின் சுத்திகரிக்கும் மின்வேதியில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, செம்பனை செயலாக்கத்தின் போது உற்பத்தி செய்யப்படும் கழிவுகளைப் பாதுகாப்பானதாகவும், தொழிற்சாலையில் மீண்டும் அந்த நீரைப் பயன்படுத்தப்படும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளதாக மேரு ஜெயா Pome Solutions நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ ரவிசந்தரன் விவரித்தார்.

இதனிடையே, சிறிய அளவிலான செம்பனை நிறுவனத்தைச் செயல்படுத்தும் உற்பத்தியாளர்களின் பயன்பாட்டை இலக்காகக் கொண்டு உருவாக்கம் கண்ட இந்த தொழில்நுட்பத்தின் பயன்பாட்டின் செயல்திறனை ஆய்வு செய்ய, மலேசிய செம்பனை வாரியத்திற்கு அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஜொஹாரி அறிவுறுத்தியுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

இந்தோனேசியாவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய செம்பனை தயாரிப்பாளரான மலேசியா, ஏறக்குறைய 15 மில்லியன் மெட்ரிக் டன் செம்பனை எண்ணெய் மற்றும் அது தொடர்புடைய பொருட்களை ஏற்றுமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!