
கோலாலம்பூர், மார்ச் 11- மலேசிய வானொலி நிலையமான RTM -மின் வானொலி தமிழ் செய்திப் பிரிவில் கடந்த 22 ஆண்டுகளாக செய்தியாளராக பணியாற்றி வந்த வாசன் என பலராலும் அறியப்படும் வாசன் முதலியார் ஆறுமுகம் இன்று காலை திடீரென காலமானார்.
55 வயதான அவரது உயிர் இன்று தூக்கத்திலேயே பிரிந்ததாக அவரது மனைவி சாந்தி தெரிவித்தார்.
பத்திரிக்கையிலும் 10 ஆண்டுகள் செய்தியாளராக வேலை செய்த அனுபவத்தையும் கொண்ட வாசனுக்கு மனைவியும் இரு மகள்களும் உள்ளனர்.
வாசன் வேலையில் அர்ப்பணிப்பு உணர்வு மிக்கவர் என்பதோடு, செய்திகளை தொகுப்பதிலும் விரிவான அறிவுத் திறனும் பரந்த அனுபவமும் கொண்டவர் ஆவார்.
தமிழ் மொழியில் ஆற்றல் மிக்கவரான வாசன், இரக்க குணமடையுவர். உதவும் பண்புடையவர் என அவருடன் பணியாற்றிவர்கள் சிலர் நிலைவலைகளைப் பகிர்ந்து கொண்டனர்.