
பிரஸ்ஸல், செப்டம்பர் 8 – Ryanair விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி, மைக்கல் ஒலெரி (Michael O’Leary) மீது, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகத்துக்கு வெளியே, இரு சுற்றுசூழல் ஆர்வலர்களால், “கிரீம் பை” கேக்குகளை வீசினர்.
ஐரோப்பாவின் மிகவும் பரபரப்பான விமான சேவை நிறுவனமான Ryanair, மிகவும் அதிகமான கார்பனை உமிழ்வதாக குற்றம்சாட்டி அவர் மேல் கேக்குகள் அடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் பதாகையுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள முயலும் மைக்கேலின் முகத்தில், கருப்பு நிற ஆடை அணிந்திருக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் கேக்கை அடிக்கும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
அதனை தொடர்ந்து, அவருடன் இருக்கும் மற்றொரு தன்னார்வலர், மைக்கேலின் தலைக்கு பின்புறமிருந்து பையை வீசியெறிகிறார்.
அதன் பின்னர், “பெல்ஜியத்திற்கு வரவேற்கிறோம். ஆனால், விமானத்தை பயன்படுத்தி மாசுபாட்டை ஏற்படுத்தாதீர்கள்” என அந்த இரு சுற்றுசூழல் ஆர்வலர்களும் கூறும் காட்சியும் அந்த காணொளியில் இடம் பெற்றுள்ளது.
எனினும், அந்த இரு சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் யார் என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை என கூறப்படுகிறது.
சுற்றுசூழலை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் Ryanair கவனம் செலுத்த தவறியதே, அச்சம்பவத்திற்கு காரணம் என சமூக ஊடக பயனர்கள் சிலர், கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
2022-ஆம் ஆண்டு மட்டும்
Ryanair விமான நிறுவனம் 13 கோடியே 30 லட்சம் டன் கான்பனை வெளியிட்டதாக மதிப்பிடப்பட்டதோடு, ஐரோப்பாவின் மிகவும் மாசுபடுத்தும் விமான நிறுவனமாகவும் அது முத்துரைக் குத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.