Latestமலேசியா

SOP புறக்கணிக்கப்பட்டதால் LRT ரயில் விபத்து  நிகழ்ந்தது

கோலாலம்பூர், ஜூன் 10 –  கடந்த மாதம் தலைநகரில் நிகழ்ந்த LRT  விபத்தின்போது , கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய SOP நடைமுறைகள் புறக்கணிக்கப்பட்டிருப்பது விசாரணையில்  தெரிய வந்துள்ளது.

சம்பவத்தன்று  பயணிகள் இன்றி பயணித்த  ரயிலின் ஓட்டுநர், கட்டுப்பாட்டு  நடவடிக்கை மையத்துடன் தொடர்பு கொள்வதில் பிரச்சனையை எதிர்கொண்டிருந்தார்.

ரயிலின் செயல்பாட்டில்  பிரச்சனை இருந்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட ஓட்டுநர் ரயிலை சொந்தமாகவே இயக்கியுள்ளார். எனினும்,  தாம் பயணிக்கும் வழிதடத்தின் பிரிவு எண்ணை அவர்,  கட்டுப்பாட்டு அறையிடம் தெரிவிக்கத்  தவறியுள்ளார்.

எனவே,  ரயில் பயணத்திற்கென நிர்ணயிக்கப்பட்ட நடைமுறை கடைப்பிடிக்கப்படாததாலே ,  அந்த விபத்து நிகழ்ந்ததாக, போக்குவரத்து அமைச்சர் டத்தோ ஶ்ரீ  வீ கா சியோங் தெரிவித்தார்.

அந்த ரயில் விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய தோற்றுவிக்கப்பட்ட செயற்குழு இன்று அதன் முடிவினை வெளியிட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!