கோலாலம்பூர், பிப் 14 – தற்காப்பு அமைச்சரான டத்தோ ஶ்ரீ ஹிஷாமுடின் கோவிட் SOP விதிமுறையையே மீறியுள்ளார். அவர் குற்றச் செயல் எதுவும் புரியவில்லை . எனவே அவர் பதவி விலக வேண்டியதில்லை என பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
SOP விதிமுறையை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பதவி விலக வேண்டுமென்றால் , பிறகு வேலை செய்வதற்கு யாரும் இருக்கமாட்டார்கள் என இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.
நேற்று ஜோகூரில், மாநில மஇகா பணிப்படை தொடக்கி வைக்கப்பட்ட நிகழ்ச்சியில் , கூட்டத்திற்கு மத்தியில் ஹிஷாமுடின் காணப்பட்ட காணொளி பகிரப்பட்டதை அடுத்து, அவர் பதவி விலக வேண்டுமென செகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னா யோ கேட்டுக் கொண்டிருந்தார்.
அதன் தொடர்பில் கருத்துரைத்த பிரதமர் அதற்கான அவசியம் ஏற்படவில்லை என குறிப்பிட்டார்.