
புத்ராஜெயா, ஏப் 22 – கோவிட் -19 பெருந்தொற்று தாக்கியது முதல் நாட்டில் இன்னும் அமலில் இருக்கும் SOP -கள் சிலவற்றைக் கடைப்பிடிப்பதில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படலாம்.
அதன் தொடர்பில், இன்னும் சில வாரங்களில் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் அறிவிப்பு செய்வாரென எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவிடத்தில் முகக் கவசம் அணிவது தொடர்பான தளர்வையும் அந்த அறிவிப்பு உட்படுத்தியிருக்குமென நம்பப்படுகிறது.