Latestமலேசியா

South City Plaza Seri Kembangan னில் மாபெரும் தீபாவளி சந்தை

கிள்ளான், அக் 22- இவ்வாண்டு தீபாவளி தொடங்க இன்னும் ஓரிரு வாரங்களே எஞ்சியிருக்கும் நிலையில், சிலாங்கூர் மக்களுக்கு ஒரு நற்செய்தியாக ஜி.எம். குளோபல் மெகா எக்ஸிபிஷன் மற்றும் கலர்ஸ் ஒஃப் இந்தியா ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து மாபெரும் தீபாவளி சந்தையை நடத்த திட்டமிட்டுள்ளன.

இந்த மெகா தீபாவளி சந்தை வரும் அக்டோபர் 27ஆம் தேதி தொடங்கி நவம்பர் 2ஆம் தேதி வரைSeri Kembangan னில் உள்ள South City Plazaவில் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக் குழு பொறுப்பாளரான ஜி.வி.சத்யகுமார் தெரிவித்தார்.

காலை முதல் இரவு வரை நடைபெறவுள்ள இந்த தீபாவளி சந்தையில் வியாபாரம் செய்ய விரும்பும் வியாபாரிகள் வெறும் 300 வெள்ளியை மட்டுமே முன்பணமாகச் செலுத்தி முகப்பிடங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

பொதுமக்களுக்கு தவிர்த்து கடை போடுபவர்களுக்கும் வாகன நிறுத்துமிட வசதிகள் ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது.

இதுகுறித்த மேல் விவரங்களுக்கு சத்யகுமரனை 016- 470 4890 எனும் எண்களில்  தொடர்பு கொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!