மோன்ட்ரியல், பிப் 16 – கனடாவின் கிழக்குப் பகுதியில் கடுமையான அலையினால் ஸ்பெய்ன் மீன்பிடிப் படகு மூழ்கியது. அந்த சம்பவத்தில் குறைந்தது 10 மீன்வர்கள் மாண்டனர். இதர 11 பேர் காணவில்லை. மோசமான பருவ நிலையினால் மற்றவர்கள் உயிர் தப்பியிருக்கும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.
கனடாவின் Newfoundland கிழக்கே 463 கடல் மைலுக்கு அப்பால் மூழ்கிய அந்த மீன்பிடி படகில் 24 பேர் இருந்ததாக அறிவிக்கப்பட்டது. கனடாவின் கூட்டு மீட்பு ஒருங்கிணைப்பு மையம் மேற்கொண்ட தேடும் நடடிக்கையில் ஏழு சடலங்கள் மீட்கப்பட்டன. மிதவையில் தத்தளித்துக்கொண்டிருந்த மூவரை மீட்புக் குழுவினர் மீட்டனர்.