
கோலாலம்பூர், மார்ச் 27 – சார்ல்ஸ் சந்தியாகோ, மீண்டும் SPAN – தேசிய நீர் சேவை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அவரது நியமனம், மார்ச் 20 -ஆம் தேதி முதல் அமலுக்கு வந்திருப்பதாக SPAN ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.
சந்தியாகோ 2025-ஆம் ஆண்டு வரை அந்த பொறுப்பை ஏற்றிருப்பார்.
இதற்கு முன்னதாக அவர் , பக்காத்தான் ஹரப்பான் ஆட்சியில் இருந்த போது, 2018 நவம்பரில் இருந்து ஏப்ரல் 2020 வரை , SPAN ஆணயத்தின் தலைவராக இருந்துள்ளார்.
அந்த ஆணையம், தீபகற்ப மலேசியாவிலும் ,லாபுவானிலும் நீர் விநியோகம் மற்றும் கழிவு நீர் தொடர்பான சேவைகளை ஒழுங்குபடுத்தும் சுயேட்சை அமைப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.