Latestமலேசியா

SPM தேர்வு எழுதும் மாணவர்களுக்கான பட்டறையில் பாகுபாடு இல்லை கல்வி அமைச்சு விளக்கம்

கோலாலம்பூர், ஜன 25 – ஜோகூரிலுள்ள பள்ளி ஒன்றில் எஸ்.பி.எம் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக பள்ளி நிர்வாகம் திட்டமிட்டுள்ள நிகழ்வில் வெவ்வேறு சமயங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாகுபாடு காட்டப்படுவதாக வெளியான தகவலில் உண்மையில்லையென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எஸ்.பி.எம் தேர்வுக்கு தயார்படுத்துவதற்காக நடத்தப்படும் பட்டறை இனப்பாகுபாடு இன்றி அனைத்து மாணவர்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் விளக்கம் அளித்துள்ளது.
.
ஜோகூர் பாருவிலுள்ள Hotel Suasana வில் ஜனவரி 19 மற்றும் 20 ஆம் தேதி நடத்தப்பட்ட 30 மாணவர்களை உட்படுத்தப்பட்ட பட்டறை தேசிய மொழி மற்றும் வரலாறு உட்பட பல பாடங்களில் தேர்ச்சி பெறத் தவறியவர்களுக்காக நடத்தப்பட்ட பட்டறையாகும். . அந்த ஹோட்டலில் ஜனவரி 26 மற்றும 27 ஆம் தேதியும் இதர மாணவர்களுக்காகவும் இதே போன்ற பட்டறை நடைபெறவிருப்பதாகவும் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இஸ்லாமிய சமய பாடத்திற்காக மட்டும் ஜோகூர் பாருவிலுள்ள பள்ளி ஒன்றில் எஸ்.பி.எம் மாணவர்களுக்காக தேர்வு பட்டறை ஒன்று நடத்தப்படுவதாக நேற்று Twiter @sangria200 கணக்கில் பயனீட்டாளர் ஒருவர் கூறிக்கொண்டதைத் தொடர்ந்து கல்வி அமைச்சு இந்த விளக்கத்தை தெரிவித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!