Latestஉலகம்மலேசியா

SPM முடித்தவர்கள் ஜூன் 15 தொடங்கி UPUonline – னில் விபரங்களைப் புதுப்பிக்கலாம்  

கோலாலம்பூர்,  ஜூன் 10-  பொது பல்கலைகழகம், போலிடெக்னிக், சமூக கல்லூரி, பொது  திறன் பயிற்சி கழகங்கள் ஆகிய கல்வி நிலையங்களில் உயர் கவியைத் தொடர, விண்ணப்பித்திருக்கும் , கடந்தாண்டுக்கான SPM  தேர்வை முடித்த  மாணவர்கள், அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை  தொடங்கி தங்களது விபரங்களை புதுப்பித்துக் கொள்ளலாம்.

ஜூன் 15 -ஆம் தேதி  தொடங்கி  ஜூன் 21-ஆம் தேதி வரை ஒரு வாரத்திற்கு, மாணவர்கள் தங்களின் விபரங்களை புதுப்பித்துக் கொள்ளலாமென,  உயர் கல்வி அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.

இன்று முதல் வெளியான தங்களின் தேர்வு முடிவைக் கொண்டு, தாங்கள் ஏற்கனவே  தேர்வு செய்திருக்கும்  படிப்புக்கான திட்டத்தையும் மாற்றிக் கொள்ளும் தேர்வும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  எனினும், நேர்முகத் தேர்வு அல்லது  அந்த பயிற்சிக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு அந்த  தேர்வு வழங்கப்படாது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!