Latestஉலகம்

Squid Game தொடர் நகலை வடகொரியாவிற்குள் கொண்டு வந்த ஆடவரைச் சுட்டுக் கொல்ல உத்தரவு

பியோங்யாங், நவ 26- தென் கொரியாவின் பிரபல Squid Game தொடரின் நகலை வட கொரியாவிற்குள் கொண்டு வந்த ஆடவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அந்த ஆடவர் அந்நாடகத்தின் நகலை USB டிரைவில் சேமித்துக் கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல், அதனைப் பிரதிகளாக எடுத்து தன் நண்பர்களுக்கும் பொதுமக்களுக்கும் விற்பனை செய்திருக்கின்றார்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட அம்மாணவரை Squid Game ல் இடம்பெறும் காட்சிகளைப் போலவே சுட்டுக் கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவரிடமிருந்து நகலை வாங்கிய ஒரு மாணவருக்கு ஆயுள் தண்டனையும், படத்தைப் பார்த்த மற்ற ஆறு பேருக்கு ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!