Latestமலேசியா

STR உதவித் தொகை ; விபரங்களை புதுப்பிக்க இன்னும் 2 தினங்களே எஞ்சியுள்ளன

கோலாலம்பூர், மார்ச் 29 – இதற்கு முன்பு BRIM என அறியப்பட்ட STR – Sumbangan Tunai Rahmah உதவித் தொகைக்கு தகுதி பெற்றவர்கள், தங்களது விபரங்களை புதுப்பித்துக் கொள்ள இன்னும் இரு தினங்களே உள்ளன.

மார்ச் 31-ஆம் தேதியுடன் தங்களது விபரங்களை புதுப்பித்துக் கொள்வதற்கான இறுதி நாள் என நிதியமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தது.

மேலும், இதன் இரண்டாம் கட்ட உதவித் தொகை பகிர்ந்தளிப்பு ரமலானை முன்னிட்டு முன்கூட்டியே வழங்கப்படுவதால், மக்கள் தங்களது விபரங்களை விரைந்து புதுப்பித்துக் கொள்வது அவசியமென அவ்வமைச்சு வலியுறுத்தி இருக்கின்றது.

மேலும், அந்த தரவு அகப்பக்கத்தில் தங்களது விபரம் இல்லாதவர்கள், தங்களை விபரங்களை வழங்கி புதிதாக விண்ணப்பமும் செய்ய முடியும்.

இதற்கு முன்னர் விண்ணப்பிக்கும் போது, சிலர் திருமணமாகதவர்களாக இருப்பர். இப்போது திருமணமாகியிருப்பார்கள். எனவே அவ்விரு பிரிவுகளுக்கும் வெவ்வேறான உதவித் தொகை வழங்கப்படுவதால் விபரங்களை புதுப்பிப்பது அவசியமென பொது மக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு வருமான வரி வாரிய அகப்பக்கத்தில் இடம்பெற்றுள்ள STR பிரிவுக்கு சென்று , அந்த உதவித் தொகைக்கு தகுதியானவர்கள் தங்களது விபரங்களை புதுப்பித்துக் கொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!