
கோலாலம்பூர், மார்ச் 16 -Sukuk நிதி பத்திர உடன்பாட்டில் 596 மில்யின் ரிங்கிட் முறைகேடு தொடர்பில் நான்கு ஆடவர்களை MACC எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்திருக்கிறது.
அந்த திட்டத்தின் பதிவு , அற்கான வெளிநாட்டு தொழிலாளர்களை தேர்வு செய்தது மற்றும் அது தொடர்பாக அமைச்சின் தரவு ஆகியவற்றில் நேரடியாக ஈடுபட்டதன் தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
40 மற்றும் 55 வயதுடைய அந்த நால்வரில் மூவர் நாளை வரை தடுத்துவைக்கப்பட்டுள்ள வேளையில் மற்றொரு நபர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மேற்கத்திய நாடுகளின் உத்தரவாத நிதி பத்திரம் போன்று Shariah சட்டத்தின் கீழ் இஸ்லாமிய நிதி பத்திரத்தை Sukuk வெளியிட்டு வந்தது.