சிரம்பான், மே 6 – Sungai Linggi நீர் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் இன்று செயல்படத் தொடங்கியதாக நெகிரி செம்பிலான் மந்திரிபுசார் Aminuddin Harun தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து சுத்திகரிக்கப்படாத நீர் விநியோகத்தை அந்த நிலையம் பெற்றதாக அவர் கூறினார். கடந்த சில நாட்களாக கடுமையான துர்நாற்றம் வீசியதால் போர்ட் டிக்சன் மற்றும் சிரம்பானில் ஒரு பகுதியை சேர்ந்த சுமார் 37,000 பயனீட்டாளர்கள் நீர் விநியோக தடையை எதிர்நோக்கினர்.
நீர் விநியோக பிரச்சனை நெருக்கடியின்போது நெகிரி செம்பிலான் நீர் விநியோக நிறுவனம் பல்வேறு இடங்களில் நீரைக் கொண்ட 12 டாங்குகளை நிறுத்திவைத்தது. மேலும் பாதிக்கப்பட்ட பல இடங்களுக்கு டாங்குகள் மூலமாக நீர் விநியோகிக்கப்பட்டது . சுத்திகரிக்கப்படாத நீரில் எண்ணெய் துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து Sungai Linggi நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடு நிறுத்தப்பட்டதால் தரமான நீர் கிடைப்பதில் நெருக்கடி ஏற்பட்டது.