Latestஇந்தியாசினிமா

Sushant Singh Rajput ட்டின் 5 உறவினர்கள் விபத்தில் பலி

புதுடில்லி, நவ 16 – காலஞ்சென்ற நடிகர் Sushant Sing Rajput டின் உறவினர்களில் ஐவர் சாலை விபத்தில் மாண்டனர். பீகாரில் பாட்னாவிலிருந்து Jamui என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்தபோது அவர்கள் சென்ற SUV வாகனம் லோரியில் மோதி விபத்துக்குள்ளானது.

Rajput டின் மைத்துனரும் போலிஸ் அதிகாரியுமான O.P Sing மற்றும் வாகன ஓட்டுனர் உட்பட ஐந்து உறவினர்கள் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே மாண்டனர். அவ்விபத்தில் நால்வர் காயம் அடைந்தனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி Mumbai யிலுள்ள அடுக்கு மாடி வீட்டில் Sushant Singh Rajput இறந்து கிடந்தார்.

அவரது மரணத்திற்கும் போதைப் பொருள் கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து அது தொடரபாக விசாரணை இன்னமும் நடைபெற்று வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!