
சுங்கை சிப்புட் ,நவ 28 – பேராக் , சுங்கை சிப்புட் அருகில் SUV வாகனமொன்று தடம்புரண்டு, 30 மீட்டர் ஆழ பள்ளத்தில் விழுந்தததில், அந்த வாகனத்தில் பயணித்த நால்வர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பூர்வீகக் குடியின் கிராமத்தில் பொழுதை கழித்தப் பின், வீடு திரும்பிக் கொண்டிருந்த வழியில் , ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு இந்த விபரீதம் நிகழ்ந்தது.
இந்த விபத்தில், ஆடவருக்கு முகம், கால்களில் காயங்கள் ஏற்பட்ட வேளை, பெண்ணுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இரு இளம் பெண்களுக்கு சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டதாக, பேராக் தீயணைப்பு மீட்பு படையின் பேச்சாளர் தெரிவித்தார்.